anemia treatment
anemia treatment

* இரத்த சோகை என்னும் நிலை உடலில் இரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதால் ஏற்படுவதாகும். பொதுவாக இப்பிரச்சனை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது.

* அறிகுறிகள்: கலைப்பு, சோம்பேறித்தனத்தை உணர்வது, மூச்சு விடுவதில் சிரமம், படபடப்பு மற்றும் சரியாக எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் இருப்பது போன்றவை இரத்த சோகைக்கான அறிகுறிகளாகும்.

* மாதவிடாய் காலத்தில் அளவிற்கதிகமாக ரத்தப்போக்கு, நாட்பட்ட இரும்புச்சத்து குறைபாடு, சிறுநீரக பிரச்சனை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் வரும் ரத்த சோகையை சரி செய்வதற்கு சில வீட்டு எளிய சிகிச்சை முறைகள் உள்ளன.

* பேரீச்சம்பழத்தை தேனில் ஊறவைத்து தினமும் இரண்டு பேரீச்சம் பழம் வீதம் உட்கொண்டு வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கும்.

* உடலில் பொட்டாசியம் அளவு குறைவாக இருந்தாலும் இரத்த சோகை ஏற்படும். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து மட்டுமின்றி பொட்டாசியம் ஏராளமாக உள்ளன.

* பழங்களில் ஆப்பிள் ஜூஸ் மற்றும் காய்கறிகளில் பீட்ரூட் ஜூஸ் பருகினால் இரத்த சோகையை சரி செய்யலாம்.

* தினமும் உணவில் பசலைக்கீரையை சேர்த்துக் கொண்டாலும் இரத்த சோகை குணமடையும்.

* பழங்களில் வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, திராட்சை மற்றும் காய்கறிகளில் கேரட், வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றில் இரும்புச் சத்து உள்ளது. இதனை தொடர்ந்து உட்கொண்டால் ரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

* தேனிலிருந்து இரும்புச் சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here