Andrea Tested Corana Positive

மாஸ்டர் பட நடிகைக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Andrea Tested Corana Positive : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக, பாடகியாக, டான்ஸராக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் இறுதியாக தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சோலோ ஹீரோயினாகவும் சில படங்களில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர் தனக்கு கொரானா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ரசிகர்களை பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளார்.