Andhira Distributor Meet With Vijay

தளபதி விஜய் சந்தித்துள்ளார் மாஸ்டர் பட விநியோகிஸ்தர் ஒருவர். இந்த சந்திப்பிற்கு பிறகு அவர் பதிவிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Andhira Distributor Meet With Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படியான நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த விநியோகிஸ்தர் மகேஷ் கொனேறு தளபதி விஜய்யை நேரில் சந்தித்து உள்ளார்.

அப்போது மாஸ்டர் திரைப்படத்திற்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தெலுங்கு ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை என்று விஜய் மகிழ்ந்துள்ளார்.

விஜய் சந்தித்த பிறகு அவருடனான சந்திப்பு குறித்து பதிவு செய்துள்ளார் மகேஷ்.

இதோ அந்த பதிவு