Andhaghaaram Movie Release Update
Andhaghaaram Movie Release Update

தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் அட்லியின் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தையும் OTT வழியாக வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Andhaghaaram Movie Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குனராக இவர் தொடர்ந்து தளபதி விஜயை வைத்து மூன்று படங்களை இயக்கினார்.

மேலும் அட்லி தற்போது கைதி, மாஸ்டர் திரைப்பட நடிகரான அர்ஜுன் தாஸை வைத்து அந்தகாரம் என்ற படத்தை தயாரித்துள்ளார்.

உண்மை கசக்கத்தான் செய்யும் பிரதர்.. அட்லியின் அடுத்த படத்திற்கு இவர் தான் காரணம் – அவரின் மனைவி பிரியா வெளியிட்ட தகவல்.!

ரிலீசுக்கு தயாராக உள்ள இப்படம் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வருகிறது.

இதனால் படக்குழு இப்படத்தை OTT வழியாக வெளியிடலாம் என முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஆனால் உண்மை என்ன என்பதை படக்குழு தான் அறிவிக்க வேண்டும். இந்த தகவலை அறிந்த அட்லி ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருந்து வருகின்றனர்.