அந்தகன் படத்தின் ஐந்து நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் 90s களின் பேவரைட் ஹீரோவாக இருப்பவர் பிரசாந்த். இவர் நடிப்பில் வெளியான படம் அந்தகன். இவரின் அப்பாவான தியாகராஜன் இயக்கத்திலும்,தயாரிப்பிலும் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் சிம்ரன், சமுத்திரகனி ,பூவையார் , கே. எஸ் ரவிக்குமார் ,ஊர்வசி, பிரியா ஆனந்த் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து அசத்தியிருந்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகப்பெரிய ஹிட் கொடுத்து கம்பேக் கொடுத்துள்ளார் பிரசாந்த். ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவராலும் பாராட்டை பெற்ற படமாக இருந்தது.
இந்தப் படத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு தொடர்ந்து தியேட்டர்களும் அதிகப்படுத்தி இருந்தன. அந்த வகையில் இந்த படத்தின் ஐந்து நாள் வசூல் எவ்வளவு என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அந்தகன் 5 நாளில் 4.7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.