அந்தகன் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
90ஸ்களின் ஃபேவரைட் நடிகராக இருப்பவர் டாப் ஸ்டார் பிரசாந்த். இவரது நடிப்பில் வெளியான படம் அந்தகன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு டாப் ஸ்டார் பிரசாந்துக்கு இந்த படம் நல்ல கம்பேக் கொடுத்தது என்றே சொல்லலாம்.
இவரின் தந்தையான தியாகராஜன் இயக்கத்திலும் தயாரிப்பிலும் வெளியாகி உள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் சிம்ரன், கே எஸ் ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு, சமுத்திரகனி, பூவையார்,வனிதா விஜயகுமார் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடிப்பில் தூள் கிளப்பியுள்ளனர்.
குறிப்பாக சிம்ரன் வில்லத்தனத்தில் மாஸ் காட்டியுள்ளார்.மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் திரையரங்குகளும் ஹவுஸ் ஃபுல்லாகி வருகிறது.
முதல் நாளில் 70 லட்சம் வசூலான நிலையில், இரண்டு, மூன்று நாட்களில் வசூலில் மிரட்டியுள்ளது. அந்தகன் படம் மூன்று நாளில் கிட்டத்தட்ட 2.99 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபலங்கள் முதல் விமர்சகர்கள் வரை அனைவராலும் பாராட்டும் படமாக அந்ததன் இருப்பது குறிப்பிடத்தக்கது.