Andhadhun Remake Music Composer

பிரசாந்த் ஹீரோவாக நடிக்க உள்ள அந்தாதுன் ரீமேக் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Andhadhun Remake Music Composer : தமிழ் சினிமாவில் 1990 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த். தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வந்த இவர் அதே வேகத்தில் பயணித்திருந்தால் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருந்து இருப்பார்.

ஆனால் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முடங்கிப்போன பிரசாந்த் அதன்பின்னர் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார்.

இதனையடுத்து நடிகர் பிரசாந்த் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இறுதியாக நடித்த இவரது படங்கள் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நடிகர் பிரசாந்த் இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வேற லெவல் களமிறங்கும் டாப் ஸ்டார் பிரசாந்த்.. அந்தாதூன் ரீமேக் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா??

இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளார். கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு சென்சேஷனல் இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் பிரசாந்த் ரசிகர்கள் எங்களின் டாப் ஸ்டார் வேற லெவல் களமிறங்குகிறார். இனி அவருக்கு எல்லாம் வெற்றிதான் என கொண்டாடி வருகின்றனர்.