Anchor Rio Raj : இவங்க கிட்ட எல்லாம் திட்டு வாங்கவா எனக்கு சம்பளம் கொடுக்கறீங்க என நிகழ்ச்சியில் நடுவே ஏற்பட்ட ரகளையில் தொகுப்பாளர் ரியோ கோபப்பட்டுள்ளார்.
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் ரியோ. ஐவரும் ஆண்ட்ருவும் சேர்ந்து ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் ரியோ நிகழ்ச்சியின் நடுவே போட்டியாளர்களின் செயலால் கோபப்பட்டு இவங்க கிட்ட திட்டு வாங்கவா எனக்கு சம்பளம் கொடுக்கறீங்க என கோபமாக பேசுகிறார்.
ஆனால் இதனை பார்த்த ரசிகர்களோ இதை பெரியதாகவே எடுத்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியின் டி.ஆர்.பி-க்காக இப்படி செய்துள்ளார்கள் என கூறி வருகின்றனர்.
என்னடா #ரியோ சாரையே கோவப்பட வச்சிட்டீங்க! ???????? ரெடி_ஸ்டெடி_போ – ஞாயிறு மதியம் 1 மணிக்கு உங்கள் விஜயில்.. #RSP #ReadySteadyPo pic.twitter.com/rlTNjeHxJ7
— Vijay Television (@vijaytelevision) January 3, 2019