Anchor Priyanka About Vijay
Anchor Priyanka About Vijay

தளபதி விஜயுடன் தான் நடிக்க வேண்டும் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் பிரியங்கா.

Anchor Priyanka About Vijay : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் பிரியங்கா.

இவருடைய எதார்த்தமான பேச்சுக்கும் சிரிப்பிற்கும் வெள்ளி திரை நட்சத்திரங்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.

OTT வழியாக படத்தை வெளியிடுவதால் நஷ்டம் – சூர்யாவை தாக்கினாரா தமிழக அமைச்சர்?

இந்தநிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் சேட்டில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் யாருக்கு தங்கையாக நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு பிரியங்கா தளபதி தளபதி என்றும் தளபதி என்ற பாடலை பாடி விஜயுடன் நடிக்க வேண்டுமென்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் ரசிகர் ஒருவர் Who’s தி ஹீரோ பாடலைப் பாடுமாறு கேட்டதற்கு உடனே பாடியுள்ளார்.

அழுகை வந்தால் அதைக் கட்டுப்படுத்திக் கொள்வீர்களா என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு நான் கண்ட்ரோல் செய்ய மாட்டேன். அழுகை வந்தால் உடனே அழுது விடுவேன். அப்போது தான் அப்பாடா என்ற ஒரு நிம்மதி கிடைக்கும் என கூறியுள்ளார்.

தொகுப்பாளினி அர்ச்சனா பற்றி கூறுங்கள் எனக் கேட்டதற்கு நான் தொகுப்பாளினியாக விஜய் டிவியில் 2013ஆம் ஆண்டு சேர்ந்தேன். அன்று முதல் இன்று வரை எனக்கு பெரிய சப்போர்ட்டாக இருந்துள்ளார்.

நாங்க இருவரும் சீக்ரெட் சிஸ்டர்ஸ். எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும் அவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். இன்றுவரை எனக்கு அவர்தான் இன்ஸ்பிரேஷன் என கூறியுள்ளார்.

சுசுபு ஆண்ட்டி இன்னும் விக் வைக்கிறத விடலையா?? வீடியோவை பார்த்து கிண்டலடித்த ரசிகர் – குஷ்பு கொடுத்த பதிலடி பாருங்க!

யாருக்காவது திருட்டு கல்யாணம் பண்ணி வைத்து இருக்கிறீர்களா ரசிகர் ஒருவர் கேட்க அந்த அளவுக்கு தைரியமில்லை. காதல்களை சேர்த்து வைத்துள்ளேன் ஆனால் திருட்டு கல்யாணம் செய்து வைத்தது இல்லை எனக் கூறியுள்ளார்.

உங்களோட ஃபேவரைட் நடிகை யார் என்று கேட்டதற்கு நயன்தாராவை மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார் மேலும் விஜயை பிடிக்கும் என கூறியுள்ளார்.