உலகப் புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Anchor of Master Chef in Tamil : கடந்த 1990-ல் இங்கிலாந்து நாட்டில் முதல் முறையாக ஒளிபரப்பான நிகழ்ச்சி மாஸ்டர் செஃப். அதன் பின்னர் இந்த நிகழ்ச்சி சிறு சிறு மாற்றங்களுடன் கடந்த 2005ஆம் ஆண்டில் பிபிசி சேனலில் ஒளிபரப்பானது.

உலகப் புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா? எகிறும் எதிர்பார்ப்பு

தற்போது கிட்டத்தட்ட 40 நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சிக்கான மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர். தற்போது நிகழ்ச்சி முதல் முறையாக தமிழிலும் ஒளிபரப்பாக உள்ளது. சன் டிவியில் மிக விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியினை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்காக இவருக்கு பல கோடியில் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகின்றன.

நடிகர் விஜய் சேதுபதி இதற்கு முன்னதாக இதே சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆனால் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை‌. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் செஃப் தமிழ் எந்த அளவிற்கு வரவேற்ப்பை பெற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.