பிரபல தொலைக்கட்சி சேனலில் தொகுப்பாளியாக இருந்து வருபவர் அர்ச்சனா. இவருடைய கலகலப்பான பேச்சால் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிகளுக்கு அப்படியொரு ரசிகர் கூட்டம் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இவருக்கு திருமணமாகி 6-ம் வகுப்பு படிக்கும் சாரா என்ற மகள் உள்ளார். தற்போது இந்த குட்டியும் தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து பிரபல தொலைக்காட்சியில் புதியதாக தொடங்க உள்ள சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளாராம்.

இது குறித்து அர்ச்சனா உங்களை போலவே என்னுடைய மகள் தொகுத்து வழங்கும் அழகை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் அல்லவா அதான் என் மகளும் தொகுத்து வழங்க உள்ளார்.

அவள் என்னை மாதிரி இல்லை. நான் 8 அடி பாய்ந்தா என் பொண்ணு 16 அடி இல்லை 32 அடி கூட பாய்வாள். இனியும் என்னுடைய மகளை பற்றி நானே சொல்ல கூடாது என கூறியுள்ளார்.