தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விஜய் பேசிய அரசியல் பேச்சுகள் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதனை அரசியல் பிரமுகர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வழக்கம் போல பா.ம.க இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் விஜயை விமர்சனம் செய்துள்ளார்.

சினிமாக்காரங்க எல்லாம் வெறும் வசனம் தான் பேசுவாங்க, நாங்க தான் களத்துல இறங்கிய செயல்படுவோம். மக்களுக்காக வேலை செய்வோம் என கூறியுள்ளார்.

சர்க்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விமரித்த அன்புமணி ராமதாஸ் தற்போது மீண்டும் விஜயை சீண்டி இருப்பது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.