Anbirkiniyaal Movie Review

அன்பிற்கினியாள் படம் எப்படி இருக்கு என்ற விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Anbirkiniyaal Movie Review : 2019ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளிவந்த ஹெலன் என்ற திரைப்படத்தை அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரிமேக் செய்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குனர் கோகுல் இயக்க கீர்த்தி பாண்டியன் அருண்பண்டியன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் கதைக்களம் :

மலையாள படத்தின் ரீமேக் என்பதால் படத்தின் கதை என்ன என்பது பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆகையால் கதையை விவரிக்கவில்லை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

நீண்ட இடைவெளிக்கு பிறகு அருண்பாண்டியன் இந்த படத்தில் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த அப்பாவாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கீர்த்தி பாண்டியனும் எதார்த்தமான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

கீர்த்தி பாண்டியனுக்கு ஜோடியாக பிரவீன் ராஜா நடித்துள்ளார். அவருக்கு பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும் அவருடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

இசை :

ஜாவித் ரியாஸ் படத்தின் கதைக்களம் அறிந்து இசையமைத்துள்ளார். அவருடைய பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

இயக்கம் :

இயக்குனர் கோகுல் மலையாள படத்தின் ரீமேக் என்பதால் ஒரிஜினலைப் போலவே அச்சு அசலாக அப்படியே படத்தை இயற்றியுள்ளார்.

அப்படத்தில் இருக்கும் பரபரப்பும் சுவாரஸ்யமும் கொஞ்சமும் குறையாமல் அப்படியே கொடுத்திருப்பது இப்படத்தை சிறந்த படமாக மாற்றியுள்ளது.

தம்ப்ஸ் அப் :

  1. நடிகர் நடிகைகள் நடிப்பு
  2. இசை
  3. இயக்கம்

தம்ப்ஸ் டவுன் :

பெரிய அளவில் குறைகள் இல்லை.

REVIEW OVERVIEW
அன்பிற்கினியாள் படம் எப்படி இருக்கு?? விமர்சனம்.!!
anbirkiniyaal-movie-reviewமொத்தத்தில் அன்பிற்கினியாள் பெயருக்கு ஏற்றார் போலவே இனிமையானது.