Anbe Vaa Heroine Tested COVID19 Possitive

சன் டிவி சீரியல் நடிகைக்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Anbe Vaa Heroine Tested COVID19 Possitive : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது புதியதாக ஒளிபரப்பாகி வரும் அன்பே வா என்ற சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.

இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் டெல்னா டேவிஸ். இந்த சீரியல் மூலம் இவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இவருக்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து பூரண குணமடைந்துள்ளார். ஆம், கடந்த 12-ம் தேதி வைரஸ் தொற்று ஏற்பட்டதாகவும் உடனே தனிமைப்படுத்தி கொண்டதால் தற்போது குணமடைந்து விட்டதாகவும் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.