Anbae Peranbae
Anbae Peranbae

Anbae Peranbae : செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும்,

முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதில் அன்பே பேரன்பே எனும் மெலடி பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது இந்த பாடல் பற்றி இசையமைப்பாளர் ஜிப்ரானும் டிவீட் செய்துள்ளார்.

அதில், “ மனதை வருடும் இந்த மெலடி பாடலுக்கு அடிமையாகிவிட்டேன். சூர்யாவின் ரசிகராகவும் செல்வா – யுவன் கூட்டணியின் காதலராகவும் என்.ஜி.கே-வை கொண்டாடுகிறேன்” என்றார்.

இப்படம் மே 31-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணிநேரம் முப்பது நிமிடங்கள் எனும் தகவல் ஒன்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.