Anathai Kulanthai : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம்

Anathai Kulanthai :

🔸 பொதுவாக அனாதைக் குழந்தையை அல்லது குழந்தைகளை தத்து எடுத்து விட்டதால் தான் ஒரு குடும்பம் அபகீர்த்தி அடைந்து விட்டது அல்லது கெட்டுவிட்டது என்று சொல்வது முறையல்ல.

🔸 அப்படி ஏதேனும் சங்கடங்கள் நேர்ந்தாலும்அது குழந்தையை தத்தெடுத்த பெற்றோரின் ஜாதக அமைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

🔸 யாருக்கெல்லாம் வாய்ப்பில்லை:

ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி 6,8, 12 எட்டு பாப பலம் பெற்று வக்கிரம் அடைந்து ஐந்தில் ராகு இருப்பின் தத்து எடுத்தாலும் கூட அந்தப் பிள்ளை தங்குவது கடினம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குழந்தையின்மை பிரச்சனையா? இதோ கர்ப்பப்பை கோளாறு சரி செய்ய, சில இயற்கையான வைத்திய முறைகள்!.

அப்படிப்பட்ட நபர்களுக்கு பிள்ளை அவர்கள் வீட்டில் வளரும் பாக்கியமே இல்லை. மேற்கண்டபடி இருப்பின் அதற்கு பரிகாரமும் இல்லை.

🔸 பிள்ளைகளின் பலன்:

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளுக்கு என்று ஒருவித ஜாதக அமைப்பு உண்டு. அதனுடன் முன் ஜென்ம வினை பயன் சேரும் போது அப்பிள்ளை அனாதை இல்லங்களை அடைகிறது.

🔸 அதுபோல பிள்ளைகளை தத்தெடுத்து வளர்க்கும் படியான தத்புத்திர யோகம் சில ஜாதகங்களில் காணப்படும்.

இந்நிலையில் கிரகசாரம் மற்றும் விதிப் பயனால்தான் அவர்கள் ஒரு குழந்தையை தத்து எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எந்த குழந்தையாக இருந்தாலும் நல்ல நேரம் பார்த்து தத்து எடுப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here