பல நடிகர் நடிகைகளின் நடிப்பில் வெளியாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Anandham Vilaiyadum Veedu Review : நந்தா பெரியசாமி இயக்கத்தில் சேரன், கௌதம் கார்த்திக், சரவணன் என பலர் இணைந்து நடித்துள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு.

ஆனந்தம் விளையாடும் வீடு முழு விமர்சனம்

படத்தின் கதைக்களம் : திண்டுக்கல் அருகே வசிக்கும் ஜோமல்லூரிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு என நான்கு பேரும் இரண்டாவது மனைவிக்கு சேரன், செல்லா, சவுந்தரராஜா ஆகியோர் மகன்களாக பிறக்கின்றனர். இவர்கள் கூட்டு குடும்பமாக இணைந்து ஒரு பெரிய வீட்டைக் கட்ட முடிவு செய்கின்றனர். இவர்களுக்கு பகையாளியாக வில்லன் டேனியல் பாலாஜி இவர்களைப் பிரிக்க நினைக்கிறார். அண்ணன் தம்பிகள் பிரிந்தார்களா? அல்லது திட்டமிட்டபடி வீட்டை கட்டி முடித்தார்களா என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

ஆனந்தம் விளையாடும் வீடு முழு விமர்சனம்

படத்தை பற்றிய அலசல் :

சேரனுக்கு எமோஷனலான கதாபாத்திரம். மிக அழகான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

கௌதம் கார்த்திக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

சரவணன் இப்படியொரு அண்ணன் நமக்கு கிடைக்க மாட்டாரா என ஏங்க வைக்கும் அளவிற்கு நடித்துள்ளார்.

படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திறம்பட நடித்துள்ளனர்.

இயக்குனர் நந்தா பெரியசாமி தமிழ் சினிமா கொண்டாடும் கூட்டுக் குடும்ப கதையை கையில் எடுத்து அதை அழகாக இயக்கியுள்ளார்.