Anandha Raj About Atlee Movie

கோடி கோடியாய் கொடுத்தாலும் அட்லி படத்தில் நடிக்க மாட்டேன், பிகில் படத்தில் நடித்து பட்டதே போதும் என்று பேசியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Anandha Raj About Atlee Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதன் பின்னர் தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார்.

இறுதியாக வெளியான பிகில் திரைப்படம் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. இந்தப் படத்தில் பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர்.

பிரபல நடிகரான ஆனந்தராஜூம் இப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவருடைய காட்சிகள் அதிகம் படத்தில் இடம்பெறவில்லை. நீக்கப்பட்டு விட்டதாக படம் ரிலீசான பிறகு அவர் குற்றம் சாட்டினார்.

இப்படியான நிலையில் தற்போது ஆனந்தராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அட்லீ படத்தில் மீண்டும் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு கோடி கோடியாய் கொடுத்தாலும் கூட அட்லீ படத்தில் நடிக்க மாட்டேன் பிகில் படத்தில் நடித்து பட்டது போதும் என பேசியுள்ளார்.

பிகில் படத்தில் ஆனந்தராஜின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படாமல் போனதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.