Amy Jackson loss
Amy Jackson loss

Amy Jackson loss – பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கிவரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.

இப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பிரிட்டிஷ் நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் என்பவர் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரின் ஜோடியாகத்தான் ஒப்பந்தமானார் டெய்சி.

அவருக்கான மாற்றும் நடிகையை கடந்த சில நாட்களாக படக்குழு தீவிரமாக தேடி வருவதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இந்த தேடுதலில் அவர்களது முதல் சாய்ஸாக இருந்தவர் இன்னொரு பிரிட்டிஷ் நடிகையான எமி ஜாக்சன் தானாம். ஆனால் அவர் தற்சமயம் கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு பதிலாக நித்யா மேனனிடம் படக்குழு பேசி வருவதாக சொல்லப்படுகிறது.

இதேபோல் சந்திரமுகி படத்திலும் முதன்முதலில் சிம்ரன் தான் ஜோதிகா வேடத்தில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் அந்த சமயம் அவரும் கர்ப்பமாக இருந்ததால் பின்னர் அந்த வாய்ப்பு பரிபோனது. தற்போது இதேபோல் எமிக்கும் நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here