Amy Jackson gets troll from her fans : Mommy-to-be Amy Jackson | Kollywood | Tamilcinema | Latest Cinema News | Tamil Movies

Amy Jackson gets troll from her fans :

நீங்கள் இனி எமி மட்டுமல்ல, மம்மியும் கூட, அதனால் கொஞ்சம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள் என எமிக்கு ரசிகர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார் எமி ஜாக்சன். அதன் பிறகு பல படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வெளிநாட்டு காதலரை சமூக வலைதளம் மூலம் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

அதன் பின்னர் தான் கர்பமாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் எமி ஜாக்சன்.
தற்போது கர்ப்பத்துக்கு பின் அந்த காதலருடன் எமி ஜாக்சன், நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

மேலும் தொடர்ந்து கிளாமரான தனது புகைப்படங்களையும் எமி வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

இதில் அண்மையில் ஒரு வீடியோவை வெளியிடும் போது கடுப்பான ரசிகர்கள், நீங்கள் இனி எமி மட்டுமல்ல, மம்மியும் கூட, அதனால் கொஞ்சம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.

கீர்த்தி சுரேஷுக்கு அதிலதான் கிக் இருக்காம்.. அவரே ஓப்பனாக சொன்ன தகவல்!

இது ஒருபக்கம் இருக்க தனது திருமணம் குறித்து பேசியுள்ள எமி, குழந்தை பெற்ற பிறகு அதுவும் 2020-ல் தான் தனக்கு திருமணம் என்று கூறி எல்லோரையும் பதறவைத்துள்ளார்.

மேலும் இந்த திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெறவிருப்பதாகவும் இதில் நெருங்கிய உறவினர்களும் முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்பதாகவும் எமி கூறியுள்ளார்.

மேலும் திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் தற்போதே தீவிரமடைந்து வருவதாகவும் எமி தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.