Amy jackson
Amy jackson

Amy jackson : தமிழ் சினிமாவில் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார் எமி ஜாக்சன். அதன் பிறகு பல படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வெளிநாட்டு காதலரை சமூக வலைதளம் மூலம் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

அதன் பின்னர் தான் கர்பமாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் எமி ஜாக்சன்.

இந்நிலையில் தற்போது கர்ப்பத்துக்கு பின் அந்த காதலருடன் எமி ஜாக்சன், நிச்சயதார்த்தம் செய்துள்ளார். கர்ப்பத்துக்கு பின் நிச்சயமா என இவரை எல்லோரும் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இது ஒருபக்கம் இருக்க தனது திருமணம் குறித்து பேசியுள்ள எமி, குழந்தை பெற்ற பிறகு அதுவும் 2020-ல் தான் தனக்கு திருமணம் என்று கூறி எல்லோரையும் பதறவைத்துள்ளார்.

மேலும் இந்த திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெறவிருப்பதாகவும் இதில் நெருங்கிய உறவினர்களும் முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்பதாகவும் எமி கூறியுள்ளார்.

மேலும் திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் தற்போதே தீவிரமடைந்து வருவதாகவும் எமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here