Ammu Abirami Recovered From COVID19

கொரானா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு உள்ளார் தனுஷ் பட நடிகை.

Ammu Abirami Recovered From COVID19 : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் அதனால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது.

சாதாரண மக்களைப் போலவே திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஒரு நாள் சிகிச்சை பலனின்றி உயிர் இருக்கும் பிரபலங்கள் பற்றிய தகவல்களும் ஒவ்வொரு நாளும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த நடிகை அம்மு அபிராமி தற்போது அதிலிருந்து முழுவதுமாக மீண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அம்மு அபிராமி. அசுரன், ராட்சசன் என குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இந்த படங்களின் நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். தற்போது இவர் கொரானாவில் இருந்து முழுவதுமாக முடிந்திருப்பதாக பதிவிட்டதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.