பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் ஜூலி. இவர் தற்போது திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். அம்மன் தாய், அனிதா MBBS ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே போல் உத்தமி என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஜூலியின் அம்மன் தாய் படத்தை பார்த்து அவரை போன் செய்து அம்மன் பாவம் டி என கலாய்த்ததாக நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான ஷக்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இதே போல் மற்ற படங்களுக்கும் கலாய்ப்பேன் கோச்சிக்க கூடாது என கூற அதற்கு ஜூலி சிரித்து கொண்டே இனி கோச்சிக்கிட்டா என்ன கோச்சிக்கலைனா என்ன? என கூறியுள்ளார்.

மேலும் பிக் பாஸ் சினேகன் சீசன் 2 போட்டியாளர்களுடன் இருந்த போது ஐஸ்வர்யாவை தூக்கி டூயட் பாடியது, பாலன் டாஸ்கில் விஜியை தூக்கி ஓடியது பற்றியெல்லாம் கேட்டதற்கு அவர் வெளியே வந்ததும் அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். இல்லையென்றால் மூன்றாவது சீசனுக்கு சென்றாலும் சென்று விடுவார் என கூறியுள்ளார்.