YouTube video

Amma COVID 19 Home Care : கொரானா நோயாளிகளுக்கு அதிதீவிர சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை தமிழக முதல்வர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு என பிரத்யேக திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

14 நாட்கள் வீட்டு தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க மருத்துவர்கள் செவிலியர்கள் மனநல ஆலோசகர்கள் என 20 பேர் அடங்கிய மருத்துவக் குழு சுழற்சி முறையில் செயல்பட உள்ளதாகவும் வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு இணையவழியில் முழு மருத்துவ உதவிகளை வழங்கவும் இந்த அம்மா கோவிட் 19 வீட்டு பராமரிப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது.

விஜய்க்கு முன்பே இலவசத்தை எதிர்த்த அஜித் – வைரலாகும் வீடியோ.!

மேலும் வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் அவர்களுக்கு அவசர ஊர்தி அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க கொரானாவால் 43 மருத்துவர்கள் பலியானதாக உதயநிதி ஸ்டாலின் பதிவிட்ட பதிவிற்கு மருத்துவர்களும் அதிமுக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

அதாவது திமுகவின் இளைஞர் அணிச் செயலாளரும் அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கொரோனா வைரஸால் தமிழகத்தில் 43 மருத்துவர்கள் பலியாகியிருப்பதாக பதிவிட்டிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் பதிவில் குறிப்பிட்டுள்ள இந்த தகவல் முற்றிலும் தவறானது என மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும் உதயநிதி ஸ்டாலின் ஆதாரமற்ற தவறான தகவல்களை பதிவிட்டுள்ளார்.

இது போன்ற செயல்கள் மருத்துவர்களின் மனநிலையை பாதிக்கும். அதிமுக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அவர்களை பெருமைப்படுத்த கடமைப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.