Amma Assistant Poongundran : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, jayalalithaa, Chennai

Amma Assistant Poongundran :

சென்னை : ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எந்த அணியிலும் இதுவரை சேராமல் இருந்துவந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், முதன்முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது புகராழம் சூடியுள்ளார்.

சசிகலாவால் போயஸ் கார்டனுக்கு அழைத்துவரப்பட்டவர் தான் இந்த பூங்குன்றன். பூங்குன்றனின் தந்தை புலவர் சங்கரலிங்கமும் ஜெயலலிதாவிடம் பணியாற்றி அவரது நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, ஜெயலலிதாவிடம் நேரடியாக பேசக்கூடிய இடத்தில் பூங்குன்றன் இருந்ததால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் என அனைவரும் பூங்குன்றனை கண்டால் விழுந்து விழுந்து மரியாதை செய்தது ஒரு காலம்.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நிலைமை தலைகீழானது. பூங்குன்றன் என்றால் யார்(!?) எனக் கேட்கும் அளவுக்கு தற்சமயம் சூழல் மாறியுள்ளது. இதனால் வெறுத்துப்போன பூங்குன்றன் சசிகலா,

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என யார் அணியிலும் சேராமல் அமைதிக்காத்து வந்தார். மேலும், சென்னையில் இருப்பதை தவிர்த்து சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தில் பெரும்பாலும் தங்கத் தொடங்கினார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியுள்ளதை அடுத்து, கவிதை நடையில் பூங்குன்றன் அவரை வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய்; மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய், அயல்நாட்டிற்கே சென்றாலும், கன்றுக்கு உணவூட்டி விவசாயி நானென்றாய்,..

ஆங்கில நாட்டிற்கே சென்றாலும்.. தமிழில் உரை நிகழ்த்திய அம்மாவின் மாணவனே! தமிழனாய் உனை வரவேற்வேற்கிறேன்” என தனது வரவேற்பை தெரிவித்திருக்கிறார்.
பூங்குன்றனின் திடீர் முதல்வர் பாசம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here