Rajini Murugadoss

Amithab Bachan Movie : ரஜினி, முருகதாஸால் தான் இது சாத்தியமானது என அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடிப்பது குறித்து நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே சூர்யா.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் இதுவரை பல மொழி படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் மட்டும் அவர் கால் பதிக்கவே இல்லை.

அமிதாப் பச்சனை பலர் தமிழில் நடிக்க வைக்க முயற்சி செய்தும் அவை அத்தனையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் தற்போது முதல் முறையாக அமிதாப் பச்சன் எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது அந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

அப்போது அமிதாப் பச்சனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு இதற்கு முருகதாஸ் – ரஜினிகாந்த் தான் காரணம் என கூறியுள்ளார். இதனை பார்த்த முருகதாஸும் மகிழ்ச்சியுடன் கமெண்ட் பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here