சன்னி லியோனின் பக்கத்து வீட்டுக்காரர் ஆகி உள்ளார் நடிகர் அமிதாப்பச்சன்.

Amitabh Bachchan New Home : பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவருக்கு ஏற்கனவே மும்பையில் பல வீடுகள் இவருக்கு சொந்தமாக உள்ள நிலையில் தற்போது சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

அட்லன்டிஸ் நிறுவனம் கட்டி வரும் இந்த பிரம்மாண்ட குடியிருப்பில் 27வது மற்றும் 28வது அடுக்குமாடி கட்டிடங்களை அமிதாப்பச்சன் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மதிப்பு 31 கோடி எனவும் கூறப்படுகிறது.

சன்னி லியோனின் பக்கத்து வீட்டுக்காரரான அமிதாப் பச்சன் - பலரின் கவனத்தை ஈர்த்து வரும் தகவல்.!!

இதே குடியிருப்பில் தான் 16வது அடிக்கும் சன்னி லியோன் ஒரு வீட்டை வாங்கியுள்ளாராம். அவர் கடந்த வாரம் 16 கோடிக்கு பத்திர பதிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆறு கார் பார்க்கில் கொண்ட இந்த பிரம்மாண்ட குடியிருப்பில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் என குடும்பத்தோடு குடியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.