Amit Bhargav Photos

Amit Bhargav : அமித் பார்கவ் வீட்டில் நடந்த விஷேசம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அமித் பார்கவ்.

இவர் இதே சேனலில் தொகுப்பாளியாக வலம் வந்த ஸ்ரீ ரஞ்சினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஸ்ரீ ரஞ்சினி இந்த தொலைக்காட்சி சேனலில் இருந்து விலகி இருந்தார்.

இதற்கான காரணம் அவர் கர்ப்பமாக இருப்பது தான் சில மாதங்களுக்கு முன்னர் தெரிய வந்தது. இதனையடுத்து தற்போது அமித் பார்கவ் வீட்டில் ஸ்ரீ ரஞ்சினிக்கு வளைகாப்பு நடந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

When your #Seemantham makes you feel like you’re marrying the love of your life all over again 🙂 @realamitbhargav #chennaisuperqueen

A post shared by Sriranjani Sundaram (@chennai_super_queen) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.