பிபி நிகழ்ச்சியில் அரங்கமே உறைந்து போகும் அளவிற்கு அமீர் பாவனியிடம் தனது காதலை கூறி பல சர்ப்ரைஸ்களை கொடுத்து அசத்தியுள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாவனி. மேலும் வெள்ளி திரையிலும் சில படங்களில் நடித்துள்ள இவர் திருமணம் ஆகி கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென அவருடைய கணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்குப் பின் தனியாகவே வாழ்ந்து வந்த பாவனின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது சக போட்டியாளராக களம் இறங்கி இருந்த அமீர் பாவனியிடம் காதலிப்பதாக கூறி வந்தார். ஆனால் அவரது காதல் குறித்து பாவினி எதுவும் பேசாமல் இருந்து வந்த நிலையில் அந்நிகழ்ச்சியை முடிவிற்கு பின் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய ‘பிபி ஜோடிகள் சீசன் 2’ என்ற நடன நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக நடனமாடி வருகின்றனர்.

இப்படியான நிலையில் இந்த வார ப்ரோமோ வீடியோவில் பாவனிக்கு அமீர் பலவிதமான சர்ப்ரைஸ்கள் கொடுத்த அசத்தியுள்ளார். அதாவது அந்த வீடியோவில் அமீர் அரங்கமே உறைந்து போகும் அளவிற்கு ஏராளமான சர்ப்ரைஸ்களுடன் மோதிரத்தையும் பரிசாக கொடுத்து தனது காதலை பாவனியிடம் கூறியுள்ளார். அதனைக் கண்டு பாவனி கண் கலங்கி நிற்கின்றார். இந்த அழகான வீடியோ ப்ரொமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

YouTube video