வாடிவாசல் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரபல இயக்குனர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Amir in Vadivasal Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 படத்திலும் மணி ரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள நவரசா வெப்சீரிஸ் தொடரில் கௌதம் மேனன் இயக்கத்தில் கிட்டார் கம்பியின் மேல் நின்று என்ற கதையில் நடித்துள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

வாடிவாசல் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் பிரபல இயக்குனர் - வெளியான தரமான அப்டேட்
தடகள வீரர் உள்பட 6 பேருக்கு கொரோனா : ஒலிம்பிக் அமைப்பாளர்கள் திணறல்..

வெற்றிமாறன் தற்போது சூரியை ஹீரோவாக வைத்து எடுத்து வரும் படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. இதன் டைட்டில் லுக் போஸ்டர் கூட நேற்று வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

Natty – Ival Nandhini நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தின் படப்பிடிப்பு பூஜை | Dream House Production

இந்த நிலையில் தற்போது வாடிவாசல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீர் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.