America Trump Join DMK
America Trump Join DMK

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் திமுகவில் இணைந்திருப்பது போல உறுப்பினர் அட்டை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

America Trump Join DMK : தமிழகத்தில் தற்போது எதிர்கட்சியாக இருந்து வரும் திமுக இரண்டு முறை ஆட்சி தவற விட்ட நிலையில் இந்த முறை எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

அவைகளில் ஒன்றாக திமுகவின் 360 கோடி ரூபாய் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அக்கட்சிக்கு வழங்கிய யோசனையான ‘எல்லோரும் நம்முடன்’ என்ற முன்னெடுப்பை அக்கட்சியினர் துவங்கியுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுகவின் வாக்கு வங்கியும் சரி, உறுப்பினர் எண்ணிக்கையிலும் சரி திமுகவை விட எப்போதும் அதிகமானதாகவே இருந்து வந்துள்ளது.

இந்த ரோல் எனக்கு சொல்லி இருக்கலாமே.. அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்ட விஜய் – அதுவும் எந்த படத்தில் தெரியுமா??

அதிமுகவை விட அதிகமான உறுப்பினர்கள் தங்கள் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ‘எல்லோரும் நம்முடன்’ முன்னெடுப்பு அறிமுகம் செய்த 72 மணி நேரத்திலேயே 1 லட்சம் பேர் திமுகவில் இணைய வழியில் இணைந்துள்ளதாக, அக்கட்சி சார்பில் விளம்பரமும் செய்யப்பட்டது.

ஆனால் சமூக ஊடகங்கவாசிகள், அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘சூணா பாணா’ வடிவேலு, காண்டிராக்ட் நேசமணி, மறைந்த முன்னாள் பாப் பாடகர் மைக்கல் ஜாக்சன் போன்றவர்களையெல்லாம் திமுகவில் சேர்த்து விட்டு அமர்களப்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.

அதற்கு ஆதாரமாக அமெரிக்க அதிபரின் திமுகவின் உறுப்பினர் அடையாள அட்டை ஒன்றில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் சிலர் கேலி செய்தும் வருகின்றனர்.