Ameer Blast Speech About Bigg Boss Tamil Show.! | Kamal Haasan | Cheran | Kollywood Cinema News | Bigg Boss Tamil 3 | Bigg Boss News
பிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி சேரனை கூட்டி வர வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார் முன்னணி இயக்குனரான அமீர்.

Ameer Blast Speech About Bigg Boss : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவராக சேரன் பங்கேற்றுள்ளார். இவர் பிக் பாஸ் போட்டியாளராக ஒப்பு கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேரனை பிக் பாஸ் வீட்டிற்குள் வைத்து மீரா மிதுன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வனிதாவின் ரி-என்ட்ரி, டிவி சேனலை கழுவி கழுவி ஊற்றும் மக்கள் – வீடியோவுடன் இதோ.!

அதன் பின்னர் சரவணன் சேரனை மரியாதையை குறையாக பேசியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமீர் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.

எனக்கு பிடிக்காத நிகழ்ச்சி பிக் பாஸ், அதே போல சேரன் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

நான் சினிமாவிற்கு வரும் போது அவர் முன்னணி இயக்குனராக இருந்தவர். அவரின் ஆட்டோகிராப் படத்தை பார்த்து மே சிலிர்த்து போயுள்ளேன் என கூறியுள்ளார்.

அவரை மற்றவர்கள் தரக்குறைவாக பேசும் போது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. பிக் பாஸ் வீட்டை நொறுக்கி சேரனை வெளியில் அழைத்து வர வேண்டும் என தோன்றுகிறது. ஆனால் நான் அமைதி காத்து வருகிறேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.