Amazing Health Benefits
Amazing Health Benefits

Amazing Health Benefits of Summer Season

வெப்பத்தைத் தணித்துக் கொள்ள சில டிப்ஸ்…

🌞 கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் உடல் பல உபாதைகளை சந்திக்கிறது. குறிப்பாக உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு ரத்தம் கெட்டிப்பட்டு அதன் ஓட்டம் பாதிக்கிறது. அதனால் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபடுவதால் சட்டென்று தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டு சில சமயங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படுகிறது.

🌞 கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிற காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால்தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும்

🌞 பானைத் தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரை அருந்தவும். இரண்டுமே தாகத்தைத் தணிக்கும். குளிர்பதனப் பெட்டியில் உள்ள ‘ஜில்’ தண்ணீர் ஒரு சில வினாடிகளுக்கு மட்டுமே திருப்தி தரும். அது உண்மையிலேயே தாகத்தை தணிக்காது.

🌞 டீ, காபி, குளிர்பானங்களை தவிர்த்து , உப்புக் கலந்த எலுமிச்சை ஜூஸ், பதநீர், நீர்மோர், இளநீர் வெப்பத்தைத் தணிக்கும் குளிர்பானங்கள்.

🌞 தர்பூஸ், அன்னாசி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்ச், திராட்சை ஆகிய பழங்களை சாப்பிடுவது புத்துணர்ச்சியைத் தரும்.

🌞 வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, முட்டைகோஸ் போன்றவை அடங்கிய சாலட் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு ஏற்றது.

🌞 ஜெல்லி, மில்க் ஷேக்ஸ் போன்ற இனிப்புகள் தேவையான ஊட்டச் சத்துகளை வழங்கும்.

🌞 மோர் கலந்த பழைய சாதத்தை ஊறுகாய் மற்றும் வெங்காயத்துடன் சாப்பிடலாம். உடலுக்குக் குளிர்ச்சியையும் இயற்கைச் சத்தையும் கொடுக்கும்.

🌞 வெயிலில் சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் குளிர்சாதன பெட்டிகளில் ஜில்லென்று இருக்கும் தண்ணீரை எடுத்து குடிக்க கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here