amaran movie latest update viral
amaran movie latest update viral

அமரன் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார் . மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தக் கதை உருவாகி வருகிறது.

அந்த வகையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதில் சிவகார்த்திகேயன் அவரது டப்பிங் பணியை தொடங்கியுள்ளாராம். இந்தப் படம் அக்டோபர் 31 தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.