amaran movie first single update
amaran movie first single update

அமரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் “அமரன்” என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு இந்த படம் வெளியாக இருப்பது அனைவரும் அறிந்ததே.

இப்படியான நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இந்த படத்தின் முதல் பாடலை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.