Amala Paul’s Aadai shoot wrapped up : The whole shooting of the film has come to an end. Aadai Movie | Kollywood | Tamil Cinema | Amala

Amala Paul’s Aadai shoot wrapped up :

Amala Paul’s Aadai shoot wrapped up : தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் அடுத்து வந்த மைனா இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

இதைதொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்த அமலாபால் 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

Oh.. இவங்க தான் அமலாபால் அம்மாவா? – முதல் முறையாக வெளியான புகைப்படம்.!

பின்னர் விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். திருமணத்துக்குப் பின்பும் ஹீரோயினாகவே நடித்து வெற்றி பெற்றார்.

இதில் இவர் நடிக்கும் ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து தற்போது இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவுக்கு வந்துவிட்டதாம். மேலும் அடுத்த வாரம் இப்படத்தின் டீசர் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.