அமலாபாலுடன் அவருடைய அம்மா ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Amala Paul with Mother Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரே வருடத்தில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

இதனையடுத்து படங்களில் கவர்ச்சியான நாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய அம்மாவோடு சேர்ந்து மாடர்னாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் ஸ்டைலில் அமலாபாலுக்கு அவரது அம்மா டஃப் கொடுப்பாங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.