கணவர் மற்றும் குழந்தையுடன் முதல் வருட திருமண நாள் கொண்டாடியுள்ளார் அமலாபால்.
சிந்து சமவெளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் அமலா பால்.
அதனைத் தொடர்ந்து விகடகவி,தெய்வத்திருமகள், வேட்டை ,காதலில் சொதப்புவது எப்படி, லவ் ஃபெயிலியர் , முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.
இயக்குனர் ஏ.எல் விஜயை திருமணம் செய்து கொண்ட அமலா பால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தன.
பிறகு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.