நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமிக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அமலாபால் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரை உலகில் பிரபலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியாகிய மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் தான் கைதி. இப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் நரேன் மற்றும் பல திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கைதி ரீமேக்கில் அமலாபால்!!… வெளியான புதிய தகவல் வைரல்!.

விறுவிறுப்பான ஆக்ஷன் கதை கலத்துடன் உருவாகி இருந்த இப்படம் ரசிகர்களின் இடம் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. தற்போது கைதி திரைப்படத்தை ஹிந்தியில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். இதனை அஜய் தேவ்கன் இயக்குவதோடு மட்டுமின்றி நடித்தும் வருகிறார்.

கைதி ரீமேக்கில் அமலாபால்!!… வெளியான புதிய தகவல் வைரல்!.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை தபு நடிக்க உள்ளார். அதாவது தமிழில் கார்த்தி உடன் படம் முழுக்க போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நரேனின் கதாபாத்திரத்தை ஹிந்தியில் பெண் கதாபாத்திரமாக மாற்றியுள்ளனர் இதில் தான் நடிகை தபு நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடிகை அமலாபால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அமலாபாலுக்கு ஹிந்தியில் இதுவே முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.