Amala Paul Speech
பாஞ்சாலிக்கே 5 புருஷன் தான், ஆனால் எனக்கு என ஆடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமலா பால் பேசிய வீடியோ சமுக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Amala Paul Speech Video : தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை அமலாபால். இவர் தற்போது ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது, இதில் கலந்து கொண்ட பேசிய போது அமலா பால் இப்படத்தை பற்றிய விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக கேட்டு வந்தேன், எந்த கதையும் எனக்கு பிடிக்கவில்லை. அப்போது தான் ஆடை படத்தின் கருவை படித்தேன், பிடித்து விட்டது.

அதன் பின்னர் ரத்னகுமார் ஹோட்டல் ஒன்றில் எனக்கு கதை கூறினார், கதையும் பிடிக்கவே நடிக்க ஒப்பு கொண்டேன்.

இந்த படத்தில் நிர்வாணமாக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது லைட் மேன் உட்பட என்னை சுற்றி 15 பேர் இருந்தார்கள்.

அனைவருமே வெளியேற்றப்பட்டு விட்டார்கள். அவர்களின் மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பாஞ்சாலிக்கே 5 புருஷன் தான், ஆனால் நான் இந்த காட்சியின் போது 15 பேரையும் எனக்கு கணவராக உணர்ந்தேன். அந்த அளவிற்கு என்னை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார்கள் என கூறியுள்ளார்.