Amala Paul Smoking Photo
Amala Paul Smoking Photo

சிகரெட்டை இழுத்து ஸ்டைலாக புகை விடும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் நடிகை அமலாபால்.

Amala Paul Smoking Photo : தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழ் சினிமாவில் தனுஷ், விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி இவரது நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிகரெட்டை இழுத்து ஸ்டைலாக புகை விடும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அமலாபால் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இந்த பழக்கம் வேற இருக்கா? புகைப்பிடித்தல் உடலுக்கு கேடு என தெரிந்தும் இதை ஊக்கப்படுத்துவது போல இப்படி புகைப்படம் வெளியிடலாமா என ரசிகர்கள் அவரை விளாசி எடுத்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக அவர் மது பாட்டில்களுடன் புகைப்படம் வெளியிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.