Amala Paul Shares Philosophy With Photo

சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தத்துவம் பேசியுள்ளார் நடிகை அமலாபால்.

Amala Paul Shares Philosophy With Photo : தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அமலா பால். இந்த படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக நைனா திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். அதன்பின்னர் விஜய் தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தலைவா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் விவாகரத்து செய்தார்.

விவாகரத்துக்குப் பிறகு படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடிக்க தொடங்கியுள்ளார் அமலாபால். மேலும் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தத்துவம் ஒன்றை கூறியுள்ளார். அதாவது என்னால் மாற்ற முடியாத விஷயங்களை இனி ஏற்றுக்கொள்வதில்லை. நான் இப்போது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை மாற்றுகிறேன்.
நீங்கள் வெறுப்பதை ஏற்றுக்கொள்வதை நிறுத்தும்போது உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடுமையானதாக மாறும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படமும் தத்துவமும் சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.