Asuran Telungu Remake
அசுரன் தெலுங்கு ரீமேக்கில் முன்னணி தமிழ் நடிகை ஒருவர் இணைந்துள்ளார். இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன். இந்த படம் தற்போது தெலுங்குவில் ரீமேக்காகி வருகிறது.

அசுரன் தனுஷாக வெங்கடேஷ் நடிக்க மஞ்சு வாரியர் வேடத்தில் ப்ரியாமணி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் தற்போது பிளாஷ்பேக் காட்சியில் நடித்திருந்த அம்மு அபிராமி வேடத்தில் நடிப்பதற்காக முன்னணி தமிழ் நடிகையான அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.