Amala Paul
Amala Paul

Amala Paul : தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் அடுத்து வந்த மைனா இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

இதைதொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்த அமலாபால் 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

பின்னர் விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். திருமணத்துக்குப் பின்பும் ஹீரோயினாகவே நடித்து வெற்றி பெற்றார்.

கடந்த ஆண்டு இவர் நடித்த ராட்சசன் படம் பெரிய ஹிட். இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்கள்.

இதில் விஷ்ணு விஷால் ரோலில் சாய் ஸ்ரீனிவாசும் அமலாபால் ரோலில் அனுபமாவும் நடித்து வருகிறார்கள்.

இதுகுறித்து அண்மையில் பேசிய அமலாபால், “ ராட்சசனில் விஷ்ணு விஷால் நடித்தது போன்று வேறு யாராலும் அந்த ரோலை அவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது.

சாய் ஸ்ரீனிவாஸ் நன்றாக நடிக்கலாம் ஆனால் விஷ்ணு அளவிற்கு அது வராது” என கூறினார். இது தெலுங்கு திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.