Amala Paul in Serial

விஜய் தனுஷ் உடன் நடித்த நடிகையான அமலா பால் அடுத்ததாக சின்னத்திரை சீரியலில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை உச்சுக் கொட்ட வைத்துள்ளது.

Amala Paul in Serial : தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அமலாபால். இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து இவர் மைனா என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

விஜய், தனுஷுடன் நடித்த அமலா பாலுக்கு இப்படி ஒரு நிலைமையா?? வெளியான தகவலால் உச்சுக் கொட்டும் ரசிகர்கள்.!!

அதன்பின்னர் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, விஜயுடன் தலைவா என அடுத்தடுத்து பல நடிகர்களுடன் நடித்தார். இவர் ஆடை என்ற படத்தில் ஆடையில்லாமல் நடித்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகளை இழந்தார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே கமிட்டாகி உள்ளார். மேலும் இவர் பிட்ட காதல் என்ற வெப் சீரிஸ் தொடரில் நடித்து இருந்தார். இந்த நிலையில் இவர் அடுத்ததாக சின்னத்திரை சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அமலாபால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனுஷ் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.