Amala Paul :
Amala Paul :

Amala Paul :

தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை சசிலலிதா என்ற பெயரில் படமாக எடுக்கிறார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் இப்படத்தில் இருக்கும் என்றும் ஜெயலலிதாவின் ஆத்மா கூறியதன் அடிப்படையில் தான் இந்த படம் அமைந்திருக்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா – ஒரே படத்தில் அடித்த ஜாக்பாட்!

மேலும் ஜெயலலிதா சிறு வயதில் எப்படி இருந்தார்? எப்படி நடிகையாக ஆனார்? அரசியலில் அடியெடுத்து வைத்தது,

அதிமுகவில் அவரது பங்களிப்பு, சசிகலாவின் வாழ்க்கை, அவருடன் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட தொடர்பு என்று மக்கள் அறியாத பல விஷயங்களையும் உள்ளடக்கி கதையாக இப்படம் இருக்கும் என்றும் இயக்குனர் ஜெகதீஸ்வர ரெட்டி கூறினார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறதாம்.

இதில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கஜோலும் சசிகலாவாக அமலாபாலும் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

Amala Paul and Kajol

 

மின்சார கனவு, விஐபி என இரண்டே தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள கஜோல் இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா?

அதேபோல் சொந்த வாழ்க்கையில் சர்ச்சையில் சிக்கி தவிக்கும் அமலாபால் இப்படியொரு ரிஸ்க்கை எடுப்பாரா என்ற கேள்வி ரசிகர்களை சூழ்ந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.