Alya Manasa Play With Baby
Alya Manasa Play With Baby

செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை ஆலியா மானசா வெளியிட்டுள்ளார்.

Alya Manasa Play With Baby : தமிழ் சின்னத்திரையில விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா.

இந்த சீரியலில் நாயகனாக நடித்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு தற்போது அழகிய மகள் பிறந்துள்ளார்.

கல்யாணத்திற்கு முன்பு நடுரோட்டில் நின்று சஞ்சீவ்விடம் காதலை சொன்ன ஆல்யா மானசா – முதல் முறையாக வெளியான வீடியோ.!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆலியா மானசாவை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்ததையடுத்து ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக தன்னுடைய மகளின் புகைப்படத்தை வெளியிட்டார்.

இதனையடுத்து ஆலியா மானசா தன்னுடைய பிறந்தநாளை மக்களுடன் கொண்டாடினார் அந்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.

என்னது அமெரிக்க பிரதமர் பெட்ரோல் பங்க்கா??? ஆலியா மானசா செய்த கலக்கல் டிக் டாக்.!

இந்த நிலையில் தற்போது தன்னுடைய குழந்தையை செல்லமாக கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி லைக்ஸ்களை அதிக அளவில் குவித்து வருகிறது.

தான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அது குறித்தும் பதிவிட்டுள்ளார்.