ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ஆலியா மானசா விலக இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அவரே விளக்கம் அளித்துள்ளார்.

Alya Manasa About Raja Rani2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். ராஜா ராணி சீரியலில் நாயகியாக நடித்த இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் 2வது சீசனிலும் நாயகியாக நடிக்கிறார்.

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுகிறாரா ஆல்யா மானசா? அவரே வெளியிட்ட தகவல்

முதல் சீஸனில் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளார். இதனையடுத்து தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வருகிறார். இதனால் இவர் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

ஆலியா மானசா சீரியலில் இருந்து விலகவில்லை அவருக்கு ஏற்றாற்போல கதையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது எனவும் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ளார் ஆல்யா மானசா.

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுகிறாரா ஆல்யா மானசா? அவரே வெளியிட்ட தகவல்

நான் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகவில்லை. என்னைக்குமே ஒரே சந்தியா தான் அது நான் மட்டும்தான் என தெரிவித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ‌