ராஜா ராணி சீரியலில் இருந்து விலக போகிறீர்களா என்ற கேள்விக்கு ஆலியா மானசா பதிலளித்துள்ளார்.

Alya Manasa About Raja Rani 2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலில் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நாயகியாக நடித்து வருகிறார் ஆல்யா மானசா. முதல் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தற்போது ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. இதனை சஞ்சீவ் மற்றும் ஆல்யா என இருவரும் உறுதி செய்தனர். இந்த நிலையில் ரசிகர்களுடன் உரையாடியபோது ஒருவர் நீங்கள் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலக போகிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பதி கோவிலுக்கு, பக்தர்கள் அச்சமின்றி வரலாம் : தேவஸ்தானம் அறிவிப்பு

அதற்கு ஆல்யா மானசா இல்லவே இல்லை என பதிலளித்துள்ளார். மேலும் முதல் குழந்தை சிசேரியன் அதைப்பற்றி சொல்லுங்க என கேட்க ஆமாம் எனக்கு முதல் குழந்தை சிசேரியன் செய்து தான் பிறந்தது. இரண்டாவது குழந்தை நார்மல் டெலிவரிக்கு முயற்சி செய்கிறோம் என கூறியுள்ளார்.

Ajith உடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குனர் – Massive Update.! | Valimai | Latest News | HD