17 அரியர் வைத்ததால் காலேஜில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டதாக விஜய் டிவி நடிகை தெரிவித்துள்ளார்.

Alya Manasa About College Life : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் இதே சீரியலில் இவருக்கு ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

17 அரியர், காலேஜில் இருந்து பாதியிலேயே விலகிய விஜய் டிவி நடிகை.. ஆனா இன்னைக்கு லெவலே வேற?? யார் அந்த நடிகை தெரியுமா?

ஐலா என்ற குழந்தையை பெற்றெடுத்த பிறகு மீண்டும் ராஜா ராணி சீரியலில் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்த இவர் இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக சீரியலில் இருந்து பிரேக் எடுத்து பின்னர் அதிலிருந்து ஒரேயடியாக விலகிக்கொண்டார்.

தற்போது இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொண்டு வரும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போதே ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்போது ஒருவர் கல்லூரியில் உங்களுடைய பர்சென்டேஜ் என்ன என கேட்க அதற்கு நான் 17 அரியர் வைத்திருந்தேன் அதனால் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டேன் என கூறியுள்ளார்.

17 அரியர், காலேஜில் இருந்து பாதியிலேயே விலகிய விஜய் டிவி நடிகை.. ஆனா இன்னைக்கு லெவலே வேற?? யார் அந்த நடிகை தெரியுமா?

மேலும் யாரும் இன்னைக்கு இருக்கும் நிலைமையை நினைத்து கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு எதில் அதிகமா அதில் நம்பிக்கையோடு பயணம் மேற்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.